Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலை பணிக்காக… புதிய பஸ் நிலையம் இடமாற்றம்… பயணிகள் அவதி..!!

மயிலாடுதுறையில்  புதிய பேருந்து நிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால்  பயணிகள் அவதிப்பட்டனர்.

மயிலாடுதுறை நகரில் காமராஜர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில் புதிய பேருந்து நிலையத்தில் நகர பூங்கா சாலையில் நேற்று தார் சாலை போடும் பணி நடைபெற்று வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அங்கு வரக் கூடிய பேருந்துகள் அனைத்தும் நேற்று சின்ன கடைவீதி நகராட்சி அலுவலகம் எதிரே நிறுத்த ஏற்பாடு செய்துள்ளோம். மேலும்  திருவாரூர், தரங்கம்பாடி மார்க்கங்களில் செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கே நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அரசு போக்குவரத்து கழக விசாரணை அலுவலகமும் தற்காலிகமாக அங்கே வைக்கப்பட்டுள்ளது.

காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் இறங்கி திருவாரூர், தரங்கம்பாடி மார்க்கங்களில் செல்லும் பேருந்தில்  ஏறுவதற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டி இருக்கிறது. இதனால் சில பயணிகள் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் செலுத்தி தற்காலிகமாக செயல்பட்ட பேருந்து நிலையத்திற்கு வந்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதிபட்டுள்ளனர்.

இது தொடர்பாக போக்குவரத்து கழகத்தினர் கூறியதாவது, சாலை பணிக்காக  இன்று (நேற்று ) ஒரு நாள் மட்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகள் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் எதிரில் நிறுத்தப்படும்.  நாளை (இன்று) அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் என்று கூறியுள்ளனர். அதைபோல் இன்று வழக்கம் போல் பேருந்து அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து சென்றது.

Categories

Tech |