Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சாலை பணியை சீக்கிரம் முடிங்க”…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்….!!!!!!!

ஏற்காட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைசோலை மலை கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்த சூழலில் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பல வருடங்களாக சேதமடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்காட்டில் நடைபெற்ற கோடை விழாவிற்காக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பழுது பார்க்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதன் முதற்கட்ட பணியாக சாலையின் மேற்பகுதியை தோண்டி பெரிய பெரிய ஜல்லிகளை போட்டு சாலை சமன் செய்யும் பணி நடைபெற்றுள்ளது.

அதன் பின் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த சூழலில் கடந்த ஜூன் மாதத்தில் சாலை பணியை முடிக்க கோரி ஏற்காடு குப்பனூர் முக்கிய சாலையில் உள்ள செங்காடு கிராமத்தில் மெயின் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து சென்றுள்ளனர். ஆனால் அந்த சாலை இதுவரை சரி செய்ய படாததால் நேற்று காலை கலை சோலை கிராம மக்கள் தங்களது குழந்தைகளுடன் செங்காட்டு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து  வந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் விரைவில் சாலை பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது இது சமாதானம் அடைந்த கிராம மக்கள் மரியிலை கை விட்டனர். இதனால்  அந்த பகுதியில்  சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |