தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அனைவரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில்,
சாலை பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். ரூ.111 கோடி செலவில் குளங்கள் தரம் உயர்த்தப்படும். 10 ஆண்டுகளில் 10,000 தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.