சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக சிறுமி ஒருவர் கானா பாடல் பாடி அசத்தி வந்தார். இந்த சிறுமி பற்றி தகவலறிந்தால் உடனே தெரிவிக்கும்படி டி.ஜி.பி சைலேந்திர பாபு கூறியிருந்தார். இந்நிலையில் அந்த சிறுமியை கண்டுபிடித்துவிட்டதாக டிஜிபி சமூகவலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு கூறியிருக்கிறார்.
அதாவது 13 வயது அச்சிறுமி ஜாய்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை டிஜிபி நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன் சிறுமியிடம் அவரது படிப்பு மற்றும் வருங்கால கனவு பற்றி கேட்டறிந்தார். அதன்பின் சிறுமியின் கானா பாடலை கேட்டு மகிழ்ந்த டிஜிபி, இதேபோல் சாலை பாதுகாப்பு தொடர்பான பாடலை தொடர்ந்துபாடுமாறு கேட்டுக்கொண்டதுடன் அவரை வாழ்த்தி அனுப்பினார்.