Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்…. 80 பேரை கைது செய்த போலீஸ்….!!!!!

நாகப்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் எப்போது பேரை போலீஸார் கைது செய்தார்கள்.

நாகப்பட்டினத்தில் உள்ள புதிய பஸ் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபா தேவி தலைமை தாங்க செயலாளர் லலிதா முன்னிலை வகிக்க ஒன்றிய செயலாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்களுக்கு எதிரான குற்ற புகார்களை அலட்சியப்படுத்தாமல் பெண்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உடன்படாததால் 80க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தார்கள்.

Categories

Tech |