Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…. போக்குவரத்து பாதிப்பு…!!

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு சத்யா நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் நகர மன்ற உறுப்பினர் பூமாராஜா ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் சீராக விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Categories

Tech |