வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை உயர்த்தியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலை உயரமாக இருப்பதால் மழைக்காலங்களில் அருகே இருக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விடுகின்றது.
இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகாமலிருக்க வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பொது மக்கள் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து மீண்டும் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆத்திரமடைந்த பொது மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுக்குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது மேல் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.