சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு திருத்தணியில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, வாகன ஓட்டிகள் சிலரின் அலட்சிய போக்கால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. இதில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வதால் ஏற்படுகின்றது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதில் திருத்தணி அரக்கோணம் சாலை, மாபொ.சி சாலை, சித்தூர் சாலை, சென்னை பைபாஸ் சாலை மார்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மற்றும் சாலை ஓரத்தில் கடையை நடத்தும் உரிமையாளர் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்த அனுமதிக்க கூடாது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.