தோனி நடித்திருந்த விளம்பரத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் தொடங்கிய 15வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடருக்காக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் சாலையில் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு டோனி ஐபிஎல் தொடரை பார்ப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏற்பட்ட சாலை நெரிசலின் போது பொது மக்கள் ஒன்று சேர்ந்து ஐபிஎல் போட்டியை காண்பது போன்று இருந்தது.
இந்த விளம்பரத்தை தடை செய்யக்கோரி சாலை பாதுகாப்பு சங்கம் சார்பில் மத்திய விளம்பர ஒளிபரப்பு ஆணையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் சாலை விதிமீறல்கள் ஆகியவற்றை தோனியின் விளம்பரம் ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து மத்திய விளம்பர ஒளிபரப்பு துறை சம்பந்தப்பட்ட விளம்பரத்தை மாற்றி அமைக்க வேண்டும் அல்லது அனைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து வரும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.