உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவனப்பட்டியை சேர்ந்தவர் வீரர் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆண்டிபட்டி கணவக்கேட்டு மாவட்ட எல்லைப் பகுதியில் பணி முடித்துவிட்டு உசிலம்பட்டி நோக்கி சென்றார். அப்போது தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே சார்பு ஆய்வாளர் விரணன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினர் வீரனின் உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.