சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சாலை விபத்து மரணங்களை தடுப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு சார்பில் முன்னெடுத்து வந்தாலும், அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டாலும் பல நேரங்களில் இதை மக்கள் கடைபிடிக்காமல் இருந்து வருகின்றன. இதனால் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்ட உலக சாலை விபத்து புள்ளி விவரங்கள் 2018-ன் படி சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாம் இடம் வகிப்பதாகவும், சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கையில் முதலிடமும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் மூன்றாமிடம் வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2020ல் சாலை விபத்தில் பலியானவர்களில் 69.8 சதவீதம் பேர் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டோர் எனவும் தெரிவித்துள்ளது.