Categories
தேசிய செய்திகள்

சாலை விபத்து மரணம்… கொரோனாவை விட கொடியது… இந்தியாவில் நிகழும் சோகம்…!!!

உலகத்திலேயே சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு என்பது கொரோனாவை விட கொடியது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் ஏற்படும் உயிரிழப்புகளின் அதிகம் சாலை விபத்துகள் மூலமாக ஏற்படும் உயிரிழப்புகள் தான். பலர் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செல்வது இதற்கு வழி வகுக்கிறது. சாலை விபத்தில் உயிர் இழந்த குடும்பங்கள் ஏராளம். அதனால் தனது தாய் தந்தையை இழந்த குழந்தைகளும் எக்கச்சக்கம்.

இந்நிலையில் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு என்பது கொரோனாவை விட கொடியது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிக விபத்துகள் நிகழும் நாடாக இந்தியா உள்ளது. இது நல்ல விஷயம் இல்லை. சாலை விபத்துகளை குறைப்பது தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாக நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |