துபாய் நாட்டில் அல்- பர்ஷா பகுதியில் முக்கிய சாலையின் மையப்பகுதியில் வங்காள தேச நாட்டைச் சேர்ந்த ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். அதன் பின் திடீரென அந்தக் காரை பின்னோக்கி செலுத்தியுள்ளார். இதில் மற்றொரு காரில் வந்த இந்தியர் ஒருவர் அதனை கவனிக்காமல் வந்து அந்த கார் மீது மோதியுள்ளார். இதனையடுத்து இரண்டு கார்களும் மற்றொரு கார் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
துபாய் போக்குவரத்து நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நடைபெற்று வந்தது. இதன் மீது நடைபெற்ற விசாரணையில் இந்தியாவை சேர்ந்த 48 வயதுடைய கார் ஓட்டுநர்களான இரண்டு பேருக்கும் சாலை விபத்து ஏற்படுத்தியதற்காக மொத்தம் ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக இந்த அபராத தொகையை அவர்கள் செலுத்த வேண்டும். அதன்படி இந்தியர் 18 லட்சம் ரூபாய் அபராத தொகையை செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.