Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலை விரிவாக்க பணி எதிரொலி!… ப்ளீஸ் இந்த மரத்தை வெட்டாதீங்க…. அரசின் முடிவால் ஹேப்பியான கிராம மக்கள்…..!!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து தாராபுரம் போகக்கூடிய சாலையில் 4 கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 3 கோடியில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைதுறை முடிவு செய்தது. இந்நிலையில் மானூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் வளர்ந்திருந்த நூறு வருடங்கள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்டவேண்டிய சூழ்நிலை உருவாகியது. இதனால் கிராம மக்கள் மரங்களை வெட்டாமல் விரிவாக்கபணி மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அவற்றில் பழனிக்கு தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் பாதயாத்திரையாக வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள் மானூர் கிராமத்திற்கு வரும்போது சாலை ஓரத்தில் குடைபோன்று வளர்ந்துள்ள மரங்களுக்கு கீழே தங்கி ஓய்வெடுத்து செல்கின்றனர். நூறு வருடங்கள் பழமைவாய்ந்த மரங்கள் தான் தங்களது கிராமத்தின் அடையாளம் எனவும் அதை வெட்ட வேண்டாம் எனவும் கிராமமக்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து சாலையோரத்திலுள்ள மரங்களை வெட்டாமல் சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை தற்போது விரிவாக்க பணிகளை செய்து முடித்து உள்ளது. இவ்வாறு கிராம மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மரங்களை வெட்டாமல் சாலைவிரிவாக்க பணியை மேற்கொண்ட தமிழ்நாடு அரசு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |