ஆட்டோ டிரைவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள முந்தல் கிராமத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று போடி பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு அப்பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது போடி புதூர் பகுதியை சேர்ந்த கவுதம், ஜெயபாண்டி, முருகன் ஆகிய 3 பேர் அருண்குமாரை வழிமறித்துள்ளனர்.
இதனையடுத்து ஆட்டோ சவாரிக்காக இந்த பகுதிக்கு வரக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டு அருண்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அருண்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போடி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அருண்குமாரை தாக்கிய ஜெயபாண்டி, கவுதம், முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.