Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சாவில் சந்தேகம் உள்ளது” பிறந்த சிறிது நேரத்தில் இறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

பிறந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜெ.காரப்பள்ளி பகுதியில் அம்ரீஷ்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யசோதா(28) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான யசோதாவுக்கு நேற்று முன்தினம் ஓசூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலர் சக்திவேல் ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் பிறக்கும்போது ஆரோக்கியமாக இறந்த குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்தது. குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |