தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சீயோன் புரம் பகுதியில் கொத்தனாரான ஜெயசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சதீஷ், ஜெபின் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சதீஷ் திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசிங் தனது தம்பியான ஞானசீலன் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் சாகப் போகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஞானசீலன் அங்கு விரைந்து சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.
இதனால் ஜெயசீலன் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு அவர்களை மீட்பதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் தம்பதியினர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன் மற்றும் மனைவியின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து ஞானசீலன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மகன்கள் சரியாக கவனிக்காததால் எனது அண்ணன், அண்ணி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.