பெங்களூருவில் சாலையோரம் சடலம் கிடந்த விவகாரத்தில் போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள புத்தேனஹள்ளியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் 35 வயது வீட்டுப்பணிப்பெண் ஒருவருடன் நீண்ட நாட்களாக உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த நவம்பர் 16ஆம் தேதி அந்த முதியவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால் அந்தப் பெண் இறந்தவரை பையில் போட்டு சாலையில் வீசியுள்ளார். வேலைக்காரப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.