Categories
கிரிக்கெட் விளையாட்டு

”சாஹர்” சரவெடி பவுலிங்…! ”கம்மின்ஸ்” போராட்டம் வீண்….. ”சென்னை” ஹாட்ரிக் வெற்றி ..!!

 ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன், சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் – டூ பிளேசிஸ் இணை களமிறங்கியது. கடந்த மூன்று போட்டிகளிலும் திணறிவந்த ருத்ராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் கொல்கத்தாவின் பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். அதற்கு பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ருத்ராஜ், ஸ்கோயர் லெக் திசையில் விளாசிய சிக்சரே சான்று.

டூ பிளேசியும் அவருக்கு துணை நிற்க, சென்னை அணி 5.3 ஓவரிலேயே அரைசதம் அடித்து கெத்து காட்டியது. நாகர்கோட்டி வீசிய 11ஆவது ஓவரில் 16 ரன்கள், பிரசித் கிருஷ்ணா வீசிய 12ஆவது ஓவரில் 17 ரன்கள் என்று இருவரும் கொல்கத்தாவை வெளுத்து வாஙகினர். ரூத்ராஜ் 33 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது, வருண் சக்கரவர்த்தியிடம் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ருத்ராஜ் 42 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 64 ரன்களைக் குவித்தார்.

ருத்ராஜ் – டூ பிளேசிஸ் இணை 115 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின், மொயின் அலியும் டூ பிளேசிக்கு துணை நின்று ஆடினார். சற்றுநேரம் அதிரடி காட்டிய மொயின் அலி 2 சிக்சர், 2 பவுண்டரிகள் என 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து நரைன் சுழலில் வீழ்ந்தார். நான்காவதாக களமிறங்கிய கேப்டன் தோனி 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 17(8) ரன்கள் எடுத்தபோது மோர்கனின் அசத்தல் கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பாட் கம்மின்ஸ் ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் இரண்டாம், நான்காம் பந்துகளில் சிக்சர் அடித்தார் டூ பிளேசிஸ். அப்போது 94 ரன்களில் இருந்த அவர், ஒரு சிக்ஸர் அடித்தால் சதம் அடிக்கலாம் என்ற நிலையில், அவரால் அடுத்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடிக்க, சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 220 ரன்களை குவித்தது.

கொல்கத்தா தரப்பில் வருண், நரைன், ரஸ்ஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். பிறகு 221 என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ராணா, கில், மோர்கன், சுனில் நரைன் அடுத்தடுத்து தீபக் சஹர் பந்து வீச்சில் ஆட்டமிழக்க தினேஷ் கார்த்திக், ரசல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.ரசல் 22பந்தில் 54ரன்னில் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக் 24பந்தில் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அணியின் வெற்றிக்காக கடைசிவரை ருத்ரதாண்டவம் ஆடிய பேட் கம்மின்ஸ் 34பந்தில் 66ரன் எடுத்து இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்தாலும் கொல்கத்தா அணி 5பந்து எஞ்சியுள்ள நிலையில் அணைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் சென்னை அணி 18ரன்கள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

Categories

Tech |