Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரார் இவரா…? வாட்சன் இடத்தை நிரப்புவாரா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இந்த வருட ஐபிஎல் தொடர் போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் சமீபத்தில் நடந்தது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த 2020ம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார். ராபின் உத்தப்பா கடந்த 2019 டிசம்பரில் ராஜஸ்தான் அணியில் மூன்று கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஐபிஎல் சீசனில் ராபின் உத்தப்பா பல நிலைகளில் இறங்கியும் 196 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.இதில் அவர் அரைசதம் ஒன்று கூட அடிக்கவில்லை. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் சிறந்த பேட்ஸ்மேனும் தொடக்க ஆட்டக்காரரருமான சான் வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார். இதனால் இவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டகாரராக களமிறங்கி வாட்சனின் இடத்தை நிரப்புவாரா? என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் சிஎஸ்கே அணி முரளி விஜய்யையும்  வெளியேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |