Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிஎஸ்கே அணிக்கு இந்த 3 பேர் முக்கியம்…. தக்க வைத்துள்ள நிர்வாகம்?…. வெளியான தகவல்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 வீரர்களை ரீடெயின் செய்யவுள்ளது.

2008ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகின்றது.. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்து முதலிலேயே வெளியேறியது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நாங்கள் மீண்டு வருவோம் என்று சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.

அதன்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் நான்குமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது சிஎஸ்கே.

வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ள சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வந்துகொண்டிருக்கின்றன.. அதேசமயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் வர இருப்பதால் மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை அணி 3 வீரர்களை ரீடெயின் செய்யவுள்ளது. அதில், முதல் வீரராக தோனியை தக்க வைப்பதாக சமீபத்தில் சென்னை அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

1.தோனி : தனது கேப்டன்சியால் 4 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை  வென்று கொடுத்துள்ளார்.. எனவே வலுவான சென்னை அணியை உருவாக்க எம்எஸ் தோனி அவசியம் தேவை என்பதால் அவரை அணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது.

2. ஜடேஜா : சென்னை அணிக்காக பல ஆண்டுகளாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ஜடேஜா.. பேட்டிங், பீல்டிங், பவுலிங் என ஜொலிக்கும் இவர் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.. எனவே சிஎஸ்கே அணியின் எதிர்கால வீரராக இவர் பார்க்கப்படுவதன் காரணமாக அவரும் ரீடெயின் செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது.

3. ருதுராஜ் கெய்க்வாட் : சென்னை அணியின் இளம் வீரரான மும்பையை சேர்ந்த ருதுராஜ் தனது சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணி ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடிய இவர் 635 ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.. எனவே நிச்சயமாக இவரே சென்னை அணியின் ஓபனராக நீடிப்பார் என சொல்லப்படுகிறது.

Categories

Tech |