நடைபாண்டில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக இருந்தவர் ரவீந்திர ஜடேஜா. ஆனால் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்த காரணத்தினால் இவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். ஜடேஜாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல் தொடர்ந்து காயப்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை அணி தொடர்பான அனைத்து பதிவுகளையும் ரவீந்திர ஜடேஜா நீக்கி உள்ளார். குறிப்பாக 2021 மற்றும் 22 தொடர்பான அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கும், சென்னை அணிக்குமான மனக்கசப்பு அதிகமாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அத்தோடு அடுத்த ஆண்டு சென்னை அணியில் ஜடேஜா தொடர மாட்டார் என்பது 90 சதவீதம் உறுதியாகி உள்ளது.