சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் சிஎஸ்கே அணியில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில்,தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடர் கொரோனாவில் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.