Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சிஎஸ்கே சிங்கம் என்ட்ரி ஆனா நாள்’.… இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை…. கொண்டாடும் ரசிகர்கள்….!!!

மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து நேற்றுடன் 14 வருடங்கள் நிறைவடைந்ததாக அந்த அணி டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. 

கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியை தனது 25 வயதில் வழிநடத்தி கோப்பையையும் வென்று கொடுத்து அசத்தியுள்ளார். அதன்பின் அவரது பெயர் எங்கும், எதிலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டிற்கு மிகச் சிறந்த கேப்டன் கிடைத்துவிட்டதாக ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடியது.

இதைதொடர்ந்து கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற் ஐபிஎல் முதல் சீசனுக்கான ஏலத்தில் இவரை வாங்க அனைத்து அணிகளும் போட்டி போட்டுக்கொண்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக போராடி தோனியை 2008 பிப்ரவரி 20ஆம் தேதி 11.33 கோடிக்கு வாங்கியது. இவரை வாங்கி நேற்றுடன் 14 ஆண்டுகள் நிறைவான நிலையில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இத்தகவலை டுவிட்டரில் தெரிவித்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தத்தில் ஒரு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்றும் மற்ற அனைத்து முறையும் பிளே ஆஃப் சென்று  வரலாறு படைத்துள்ளது. இன்று வரை ‘தல’ என்று  ரசிகர்கள் தோனியை  அன்போடு அழைத்து வரும் நிலையில், இவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெற்றுவிடக் கூடாது என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |