Categories
அரசியல்

சிஏ தேர்வர்கள் கவனத்திற்கு…. தேர்வு தேதி மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!!

பட்டய கணக்காளர்கள் தணிக்கை, வரிவிதிப்பு, நிதி மற்றும் பொது மேலாண்மை உட்பட வணிகம் மற்றும் நிதியின் அனைத்து துறைகளிலும் பணிபுரிகின்றனர். சிலர் பொது நடைமுறைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர், மற்றவர்கள் தனியார் துறையில் வேலை செய்கிறார்கள், சிலர் அரசாங்க அமைப்புகளால் வேலை செய்கிறார்கள். இந்நிலையில் பட்டய கணக்காளர் தேர்வானது (சி.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான மே மாத நடைபெற இருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த தேர்வு குறித்த தேதி மாற்றம் செய்யப்படுவதாக இந்தியாவின் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. ஏனென்றால் பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெறுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இதையடுத்து மே மாதம் நடைபெற இருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

Categories

Tech |