Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிகரெட் கேட்ட வாலிபர்…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறிதினவிலை கிராமத்தில் சண்முகம்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லதா அதே பகுதியில் உள்ள தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிகரெட் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து லதா சிகரெட்டை எடுக்க திரும்பியபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து லதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |