Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி….. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியது ஏன்….?? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகரில் 27 வயதுடைய கர்ப்பிணி பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கர்ப்பிணி பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |