Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விவசாயியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சோலைசேரி மெயின் ரோடு பகுதியில் விவசாயியான ராஜகுரு என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் இருக்கும் மகனின் வீட்டில் தங்கியிருந்து ராஜகுரு தனது மனைவிக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜகுரு தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கணினியையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜகுரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |