Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள துறைமங்கலம் பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனுக்கு உடல்நலம் சரியில்லாததால் சீதா லட்சுமி அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை 30 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பரமேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |