Categories
உலக செய்திகள்

சிகிச்சைக்காக 1 வருடமாக…. காத்திருக்கும் நோயாளிகள்….. பிரிட்டனில் அதிகரிக்கும் எண்ணிக்கை…!!

சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையானது ஒரு ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிக்காத மற்ற நோயாளிகள் தங்களுடைய வழக்கமான சிகிச்சைக்காக 1 ஆண்டிற்கு மேலாக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் 2008 க்கு பிறகு எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு சிகிச்சைக்காக காத்திருப்போரின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கடந்த வருடம் செப்டம்பரில் காத்திருப்போரின் எண்ணிக்கை 1305 இருந்த நிலையில் தற்போது அது மாறி 13,9,545 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி பிரிட்டனின் NHS மருத்துவமனைகள் அவற்றின் புற்றுநோயாளிகளின் இலக்குகளை அடைய தவறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மொத்தத்தில், 94.5 சதவீத புற்றுநோயாளிகள் ஒரு மாதத்திற்குள் தங்களது சிகிச்சையை ஆரம்பித்துள்ளனர். எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் போன்ற சோதனைகளுக்காக செப்டம்பர் மாதத்தில் மட்டும் 6 வாரங்களுக்கு மேலாக நோயாளிகள் காத்திருந்துள்ளனர். ஆனால் NHS ன் இலக்கு என்னவென்றால் 1% நோயாளிகளே 6 மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்பதாகும்.

Categories

Tech |