மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தடபெரும்பக்கம் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி ராஜம்மாள் இவர்மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளின் பிள்ளைகள் அவரவர் குடும்பத்துடன் தனியாக வசிக்கின்றனர். இந்நிலையில் பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்ட ஜெயராமனுக்கு போதிய வருமானம் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர்.
இதனால் ஜெயராமன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் ராஜம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் . ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜாம்பாள் ராஜம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயராமனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் . மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.