சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கந்தபாளையத்தில் உள்ள மேற்கு தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் இரும்பு ஆலையில் பணிபுரிந்து வந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை.
இதற்கிடையே மேல்சிகிச்சை செல்ல பிரபாகரனிடம் பணம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த பிரபாகரன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக பிரபாகரனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பிரபாகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நல்லூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.