Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த பெண்… இச்சைக்கு இணங்காததால் நேர்ந்த விபரீதம்…. மருத்துவரின் வெறிச்செயல்…!!!!

சிகிச்சைக்கு வந்த பெண் தன் ஆசைக்கு இணங்காததால் அவரை வெட்டிக் கொலை செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கானேபல்லே என்ற கிராமத்தை சேர்ந்த ஒபைய்யா என்பவர் வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மூட்டு வலியின் காரணமாக அவரிடம் மருத்துவம் பார்க்க சென்றுள்ளார். அப்போது ஒபைய்யா மருந்து வழங்குவதாக கூறி வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அவரின் கை கால்களை கட்டி வைத்து கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

பின்னர் வீட்டை விட்டு வெளியில் வந்த ஒபைய்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஒபைய்யாவின் வீட்டில் சோதனை செய்தபோது விஜயலட்சுமி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது விஜயலட்சுமியின் உறவினர்கள் ஒபைய்யாவை கீழே தள்ளி தர்மஅடி கொடுத்தனர். இதனால் ஒபைய்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |