14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டி என்ற பகுதியில் மருத்துவர் ஒருவர் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்ற மாதம் 31ம் தேதி தனது கிளினிக்கிற்கு வந்த 14 வயது சிறுமிக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மருத்துவர், அங்கு வேலைப்பார்க்கும் ஊழியர்களை வெளியே போகச் சொல்லி விட்டு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
அந்தச் சிறுமி இச்சம்பவத்தை அவரது பெற்றோர்களிடம் கூற, இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் இன்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில், மருத்துவரை கைது செய்து, அவர் மீது காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.