இருசக்கர வாகனம் நிலை தடுமாறி படுகாயமடைந்த லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள கண்டிப்பாளையம் பகுதியில் சுகுமார் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் கழுவக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சுகுமார் கீழே விழுந்துள்ளார் இதில் விபத்தில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுகுமார் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் பரிசோதித்து சுகுமாரை மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.