வெள்ளை புலி தாக்கியதில் பூங்கா ஊழியர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
சென்னை மாவட்டத்திலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளும், பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு பூங்கா நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நகுலன் என்ற வெள்ளை புலிக்கு பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அப்போது திடீரென கோபமடைந்த வெள்ளைப்புலி பூங்கா ஊழியரும், விலங்கு காப்பாளருமான செல்லையா என்பவரை தாக்கியது. இதில் லேசான காயத்துடன் செல்லையா உயிர் தப்பிவிட்டார். இதனையடுத்து காயமடைந்த செல்லையாவை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.