Categories
தேசிய செய்திகள்

சிகிச்சை நாய்க்கா…? மனுஷங்களுக்கா….? அரசு மருத்துவமனையின் அவலம்…. வெளியான காணொளி…!!

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கையில் நாய் படுத்திருந்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சமீப நாட்களாக அரசு மருத்துவமனைகளின் நிலை மிகவும் மோசமானதாக மாறி வருகிறது பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் சடலத்தை நாய் கடிப்பதும், பிறந்த குழந்தைகளை எலிகள் கடிப்பதும் நடந்துள்ளது. தற்போதும் அதே போன்று அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வு குறித்து காணொளி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முராதாபாத் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது.

அங்கு நோயாளிகள் சிகிச்சை எடுக்கும் வார்டில் உள்ள மெத்தையில் நாயொன்று படுத்துக்கிடக்கும் காணொளி காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இது குறித்து முறையாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |