தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிக நெருங்கிய உறவுகளை இழக்கும் வேதனை எவராலும் அறிய முடியாதது.
அதுமட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தைகளும் கொரோனாவால் உயிரிழக்கும் சம்பவமும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு காரணமாக பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் இருந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.