உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு கவரிங் நகை வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கவரிங் நகை வியாபாரம் செய்து வந்த வர கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகததால் மனமுடைந்த முருகேசன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக முருகேசனை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.