Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபர்… வீட்டில் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தொழிலதிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுல்தான்பேட்டை பகுதியில் சையத் அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாத்திமா பேகம் என்ற மனைவியும், சிக்கந்தர், பர்கத் என்று 2 மகன்களும் உள்ளனர். தற்போது சிக்கந்தர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் பர்கத் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சையத் அக்பர் டிராக்டர் டிரைலர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்த நிலையில் அதை மூடி விட்டு கடந்த ஒரு ஆண்டாக வெங்காய மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் குடும்பத்தினர் மிகவும் மனமுடைந்து இருந்துள்ளனர். இதனைதொடர்ந்து வாழ்வில் விரக்தியடைந்து கடந்த 4ஆம் தேதி சையத் அக்பர், பாத்திமா பேகம், பர்கத் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளனர். இதனையறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு பரமத்திவேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா பேகம் மற்றும் பர்கத் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சையத் அக்பருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சையத் அக்பர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை சையத் அக்பர் வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமத்திவேலூர் காவல்துறையினர் சையத் அக்பரின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |