தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார் . இதனையடுத்து வீட்டில் தீவிர ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் வழக்கமான பரிசோதனையை மேற்கொண்டு வந்த இவர் மேல் சிகிச்சைக்காக துபாய் சென்றார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மருத்துவமனையில் சத்ரியன் திரைப்படத்தை செவிலியர்கள் உடன் ரசித்துப் பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். தனைதொடர்ந்து அவர் சிகிச்சை முடிந்து இன்று காலை 2.30 மணி அளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தடைந்தார். இதனால் அவருடைய தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.