இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாமியப்பா நகரில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மணிகண்டன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்துள்ளார். இதற்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிகண்டனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சிகிச்சை முடிந்த பிறகு மணிகண்டனின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மணிகண்டன் உடல் முழுவதும் பெற்றோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.