Categories
சினிமா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பாரதிராஜா…. நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் பாரதிராஜா அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற நிலையில் பின்பு ஓரிரு நாட்களிலேயே அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதனால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பரிசோதனை செய்தத்தில் அவருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தி நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமந்த கரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து பாரதிராஜாநேற்று  மாலை வீடு திரும்பினார்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் பாரதிராஜாவை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.முதல்வரை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

Categories

Tech |