Categories
சினிமா தமிழ் சினிமா

“சிக்கனமாக செலவு செய்யுங்கள்” சினிமாவில் போட்ட முதலீட்டை எடுக்க முடியாது…. தயாரிப்பாளர் கே. ராஜன் ஆதங்கம்….!!!

நாட் ரீச்சபிள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

புதுமுக நடிகர்கள் விஷ்வா, சாய் தன்யா சுபா ஆகியோர் நடித்துள்ள படம் நாட் ரீச்சபிள். இந்த படத்தை சந்த்ரு முருகானந்தம் இயக்கியுள்ளார். இப்படத்தை கிராக்ப்ரைன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம், சினிமாவை தற்போது ஜெயிக்க வைப்பது சிறிய தயாரிப்பாளர்கள் தான் என்றார். அதன் பிறகு பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் எல்லோரும் சினிமாவை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர சினிமாவை வாழ வைப்பதில்லை என்றார்.

இந்நிலையில் பிரபலமான நடிகர்களாக வலம் வருபவர்கள் தங்களுடைய சூட்டிங்கை வெளி மாநிலத்தில் வைப்பதால் இங்குள்ளவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றனர்‌. இத்தகைய சூழலை மாற்ற வேண்டும் என நான் ரஜினி சாரிடமே கோரிக்கை விடுத்துள்ளேன். இன்றைய காலகட்டத்தில் படம் எடுப்பது மிகப் பெரிய பிரச்சனையாக இல்லை. மக்கள் படங்களை பார்ப்பதற்கு ஆர்வமாகவே இருந்த போதிலும் ரிலீஸ் செய்வதற்கு தான் கஷ்டமாக இருக்கிறது. சினிமாவை சிறிய படங்கள் தான் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள். ஏனெனில் போட்ட முதலீட்டை சினிமாவில் எடுக்க முடியாது. நாட் ரீச்சபிள் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

Categories

Tech |