Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிக்கனை சாப்பிட்ட 5 நிமிடத்தில்…”4 வயது குழந்தைக்கு ஏற்பட்ட துயர சம்பவம்”… எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!

டெல்லியில் சிக்கன் சாப்பிட்ட 4 வயது சிறுமி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவரின் 4 வயது மகள் வைஷ்னவி. இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர்கள் சிக்கனை வாங்கி கொடுத்துள்ளனர். சிக்கனை சாப்பிட்ட ஐந்து நிமிடத்தில் அந்த குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் மரணம் குறித்து அங்கு இருந்த குழந்தை நல மருத்துவர் கூறியதாவது: ” குழந்தையின் உணவுக்குழல் மிகவும் சிறியது. இதில் கடினமான பொருட்களை நாம் கொடுக்கும் போது அது மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்தம், நுரையீரலிலிருந்து செல்கின்ற பிராண வாயு காற்று அடைக்கப்பட்ட மூன்றிலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் மூளைக்குத் தேவையான பிராண வாயுவும், ரத்தமும் கிடைக்காததால் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

குழந்தைக்கு உணவு சாப்பிடும்போது கொடுக்கும் போது பெற்றோர்கள் கவனமாக கொடுக்க வேண்டும். குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்கும்போது, விளையாடிக் கொண்டிருக்கும்போது உணவுகளை கொடுக்கக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு பல் முளைத்து ஐந்து வயது ஆனபிறகு சிக்கன் போன்ற உணவுகளை கொடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் நன்கு கடித்து சாப்பிட கற்று கொடுக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர் எச்சரித்தார்.

Categories

Tech |