அமெரிக்காவில் சிக்கன் ஆர்டர் செய்தவருக்கு உணவை எடுத்துச் சென்ற டெலிவரி பாய் சிக்கன் தின்று விட்டு வெறும் எலும்பை மட்டும் டெலிவரி செய்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றது.
பெரும்பாலான மக்கள் இருந்த இடத்திலிருந்து தங்களுக்கு வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றன. முன்பெல்லாம் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வருவார்கள். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. நமக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்தால் போதும் நமது வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும். அதில் சில வேடிக்கையான சம்பவங்கள் நடைபெறும். அது போன்ற ஒரு நிகழ்வு இங்கு அரங்கேறியுள்ளது. நபர் ஒருவர் டோர் டேஸ்ட் என்ற உணவு டெலிவரி செயலின் மூலமாக ப்ரைட் சிக்கனை ஆர்டர் செய்தார்.
சரியான பசியுடன் இருந்த அவர் காலிங் பெல் அடித்தவுடன் ஓடி வந்து அந்தப் பார்சலை வாங்கி விரைவாக அதை திறந்து பார்த்தார். பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே கறிக்கு பதிலாக எலும்பு துண்டுகள் மட்டுமே இருந்தது. அதனுடன் ஒரு பேப்பர் இருந்தது. அதை திறந்து பார்க்கும்போது ஃப்ரைட் சிக்கனுடன் உங்களுக்கு டெலிவரி செய்ய வந்து கொண்டிருந்தேன்.ஆனால் எனக்கு மிகுந்த பசி ஏற்பட்டதால் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று நினைத்து அதை சாப்பிட்டு விட்டேன். எலும்பை உங்களுக்கு அனுப்பி விட்டேன். என்னிடம் பணம் இல்லை என்று எழுதி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=ORKzZnjJdFU
இந்த கடிதத்தை பார்த்த வாடிக்கையாளர் கடும் கோபமடைந்தால் இதை தொடர்ந்து அவர் கஸ்டமர் கேரில் புகார் கொடுத்தபோது பணத்தை திருப்பி அளிக்க மறுத்துவிட்டனர். ஏனெனில் அந்த டெலிவரி பாய் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து டெலிவரி செய்த கடைசி பார்சல் அதுதான். அதன் பிறகு அவர் வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் தான் தைரியமாக அந்த டெலிவரி பாய் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார். இதை தொடர்ந்து கஸ்டமர் வழக்கு பதிவு செய்த நிலையில் அவருக்கு பணமும் ஃப்ரைடு சிக்கனும் கிடைத்தது . இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.