Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சிக்கன் கட்லெட்… சுவையாக செய்வது எப்படி?

சிக்கன் கட்லெட் செய்ய தேவையான பொருள்கள் :

சிக்கன்                                – அரை கிலோ
இஞ்சி துண்டு                  – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்             – 1 டீஸ்பூன்
கருவேப்பில்லை          – தேவையான அளவு                                                                                                                          புதினா தழை                   – தேவையான அளவு
முட்டை                            – 1                                                                                                                                                                  பூண்டு பேஸ்ட்              – 1 டீஸ்பூன்
உருளைக் கிழங்கு       – 1
கரம் மசாலா                  – 1 டீஸ்பூன்
பிரட் தூள்                         – தேவையான அளவு
பெரிய வெங்காயம்    – 1
உப்பு                                   – தேவையான அளவு

செய்முறை : 

முதலில் சிக்கனுடன் கரம் மசாலா தூள், உப்பு, கருவேப்பில்லை சேர்த்து வேக வைக்கவும். வேகவைத்த சிக்கன் ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பிறகு அதில் பச்சை மிளகாய், இஞ்சிப்பூண்டு மற்றும் புதினா தழை போட்டு வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்த சிக்கன், கரம் மசாலா தூள், உருளைக் கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

சிறது நேரம் சூடு தணிந்த பின்பு, அவற்றை சிறு உருண்டை வடிவில் செய்து, அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்த பின்னர் பிரட் தூள்களில் புரட்டி எடுக்கவும். புரட்டி எடுத்த கட்லெட் ஐ வானலியில் எண்ணையை விட்டு வறுத்து பின்பு பரிமாறவும்.

Categories

Tech |