புனேவை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கலான வடிவமைப்புக் கொண்ட 100 கிலோ கேக் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
பூனேவைச் சேர்ந்த பிரபல கேக் கலைஞர் பிராச்சி தபால் டெப். இவர் ‘வேகன் ராயல் ஐசிங்’ என்ற முறையில் 100 கிலோ எடையுள்ள மிலான் கதீட்ரலின் சிக்கலான வடிவம் கொண்ட கேக் ஒன்றை செய்துள்ளார். இதற்காக உலக சாதனை புத்தகம் இவரை முன் மாதிரியாக கொண்டு ராயல் ஐசிங் கலைஞர் என்று அங்கீகரித்துள்ளது.
பிராச்சி, ‘ராயல் ஐசிங்’ சிறப்பு வடிவங்களில் கேக் செய்யும் கடினமான கலையில் நிபுணத்துவம் பெற்றவராக விளங்குகிறார். ஐரோப்பிய கட்டிடக் கலை மாதிரியான முட்டை இல்லாத ராயல் ஐசிங் முறை மூலம் கேகேக்குகளை தயார் செய்து இவர் பிரபலமானார். பொதுவாக நிலையில் முட்டை கலந்து செய்யப்படும் இந்த மிலான் கதீட்ரலின் கேக், 6 அடி 4 அங்குல நீளம் 4 அடி 6 அங்குல உயரம் மற்றும் 3 அடி 10 அங்குல அகலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.