Categories
சினிமா தமிழ் சினிமா

சிக்கலில் இருந்து மீண்டு வந்த ‘கன்னிராசி’… நாளை தியேட்டரில் ரிலீஸ்…!!

நடிகர் விமல் நடிப்பில் தயாராகி வெளியாகவிருந்த ‘கன்னிராசி’ திரைப்படத்தின் தடை நீங்கியதால் நாளை ரிலீசாகவுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விமல் நடிப்பில் எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கன்னிராசி’ . இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படம்  கிங் மூவி மேக்கர்ஸ் சமீன் இப்ராஹிம் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தயாராகி கொரோனா ஊரடங்கிற்க்கு முன்னதாகவே வெளியாக இருந்தது.

பின்னர்  தாமதம் ஏற்பட்டு தியேட்டர்கள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் சமீன் இப்ராஹிமுக்கும்  மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும் விநியோக உரிமையில் பிரச்சினை ஏற்பட்டு படம் ரிலீஸுக்கு இடைக்கால தடை வழங்கப்பட்டது. தற்போது அந்த வழக்கு சுமூகமாக முடிந்துள்ளது. இதனால் நாளை (டிசம்பர் 4) கன்னிராசி திரைப்படம் தியேட்டரில் ரிலீசாக இருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார் .

 

Categories

Tech |