உத்தரபிரதேசத்தில் தேசியவாதத்தை ஆதரிக்கும் 80 சதவீதத்தினருக்கும் கிரிமினல்களை ஆதரிக்கும் 20 சதவீதத்தினருக்கும் தான் போட்டி என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் உ.பி., தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, “தற்போது 80க்கும் 20க்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது.
80 சதவீதம் என்பது தேசியவாதம், சிறந்த அரசு, முன்னேற்றம் ஆகியவற்றை ஆதரிப்பவர்கள். இந்த 80 சதவீத மக்கள் பா.ஜ.,விற்கு வாக்களிக்கும் வாக்காளர்கள். மாபியா, கிரிமினல், விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரானவர்கள் என 15 முதல் 20 சதவீதம் பேர் பா.ஜ.,விற்கு எதிராக வாக்களிப்பார்கள். எனவே, இது 80-20 போட்டி. உ.பி.,யில் தாமரை மீண்டும் மலரும்.”என அவர் கூறினார்.